தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

மாணிக்க வீணை ஏந்தும்

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்
அருள்வாய் நீ இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்
நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய்
பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய்
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்
வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும்
அள்ளி அறிவைத் தரும் அன்னையும் நீ
வாணி சரஸ்வதி மாதவி பாரதி வாகதீஸ்வரி மாலினி
காணும் பொருளில் தோன்றும் கலைமணி
வேண்டும் வரம் தரும் வேணி
நான்முகன் நாயகி மோகனரூபிணி
நான்மறை போற்றும் தேவி நீ
வானவர்க்கமுதே தேனருள் சிந்தும்
கான மனோகரி கல்யாணி
அருள்வாய் நீ இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்...

செவ்வாய், 24 டிசம்பர், 2013

சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா

ராகம்:- ஆபோஹி தாளம்:-ரூபகம்

பல்லவி

சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா
தில்லை சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா( சபாபதிக்கு)

அனுபல்லவி

கிருபாநிதி இவரைப்போல கிடைக்குமோ
இந்த தரணி தன்னில் (சபாபதிக்கு..)

சரணம்

ஒருதரம் சிவசிதம்பரம் என்றால் சொன்னால் போதுமே
பரகதிக்குயடைய வேறே புண்ணியம் செய்யவேண்டாமே
அரிய புலையர் மூவர் பதம் அடைந்தார்
என்றே புராணம் சொல்லக்கேட்டோம்
கோபலகிருஷ்ணன் பாடும் (சபாபதிக்கு)

ஆனந்த நடமாடுவார் தில்லை

ராகம்:- பூர்விகல்யானி தாளம் :-ரூபகம்

பல்லவி

ஆனந்த நடமாடுவார் தில்லை
அம்பலம் தன்னில் அடிபணிபவருக்கு அபஜெயமில்லை....(ஆனந்த......)

அனுபல்லவி

தானந்தமில்லாதா ரூபன்
தஜ்ஜம் தகஜம் தகதிமி தளாங்கு தகதிமி என.. (ஆனந்த.....)

சரணம்

பாதி மதி ஜோதி பளீர் பளீரென
பாதச்சிலம்புகள் கலீர் கலீரென
ஆதிகரை உண்ட நீலகண்டம் மின்ன
ஹரபுர ஹரசிவ ஹரசங்கரா அருள்பர குருபரா என
அண்டமும் பிண்டமும் ஆடிட
எண்திசையும் புகழ் பாடிட..... (ஆனந்த...)

ஞாயிறு, 24 நவம்பர், 2013

விநாயகர் துதி

ராகம் - நாட்டை; தாளம் - ஆதி 


தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன ...... தனதான


கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் ...... அடிபேணிக்

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை ...... கடிதேகும்

மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய ...... மதயானை

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு ...... பணிவேனே

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ...... முதல்வோனே

முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
அச்சது பொடிசெய்த ...... அதிதீரா

அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை ...... இபமாகி

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் ...... பெருமாளே

நவராகமாலிகா


புதன், 28 ஆகஸ்ட், 2013

குறையொன்றுமில்லை..


கானாப் பாடல்கள

கெடச்ச வரை லாபமுன்னு சுருட்டுதடா உலகம்

(பல்லவி)

கெடச்ச வரை லாபமுன்னு சுருட்டுதடா உலகம்..!
நம் காலை வாரி விட்டபடி மூட்டுதடா கலகம்..!
பொது நலத்தை கொன்று தின்னும் கொடூரமான உலகம்..!
இந்த சுயநல அரக்கனுக்கு இல்லையடா மரணம்..!

(சரணம் - 1)

பதவி மேல ஆச வச்சி ஆளை காலி பண்ணுது
பொருளு மேல ஆச வச்சி பொட்டியத்தான் தூக்குது
பொண்ணு மேல ஆச வச்சி மிருகமாக மாறுது
மண்ணு மேல ஆச வச்சி மண்ணாகிப் போகுது..!  (கெடச்ச வரை... )

(சரணம் -2)

சொத்துக்காக அப்பனையே கண்டபடி உதைக்குது
பெத்தவன்னு பாக்காம விரட்டிதான அடிக்குது..!
காசுக்காக கட்டினவளை வீட்டை விட்டு விரட்டுது
மனித மனம் மிருகமாகி வேதனையை கூட்டுது..!  (கெடச்ச வரை... )



துபாய் போன மச்சான் பேரு கபாலி

(பல்லவி )

துபாய் போன மச்சான் பேரு கபாலி..!
துட்டு சேக்க அவன் படுற பாடு தலைவலி..!
ஒட்டகத்தை மேய்ச்சாதாண்டா தினக் கூலி..!
நம்ம ஷோக்காலி அங்க ஆனனாடா சீக்காலி..!

(சரணம்- 1)

மச்சி குல்லா போடும் வேலை உனக்கு எதுக்குடா..?
வளைகுடா நாட்டுல முதுகு வளைவு எதுக்குடா..?
நம் நாட்டுலயே நெறைய வேலை இருக்குடா..!
காசு குறையானாலும் உன்னாடுங்கறது மிடுக்குடா..!
(துபாய் போன..)

(சரணம்- 2)

அங்கே கசக்கி பிழியும் கஸ்மாலங்க நிறையடா..!
இங்கே உழைச்சா போதும் நம்ம நாடு செழிக்குண்டா..!
வெய்ய நாட்டில் வெந்து போவதெதுக்குடா..!
நம்ம மக்களோட வாழ்வதுதான் சிறப்புடா..! (துபாய் போன..)

(சரணம் 3)

அம்மா அப்பா பாசம் அங்கே இருக்குமா..?
அன்பு மனைவியோட அரவணைப்பு  கிடைக்குமா..?
உன் குழந்தைகளின் குறும்பை ரசிக்க முடியுமா..?
வேணான்டா கபாலி வெளிநாடு..!
உழைப்பதுல நீதாண்டா பெரியாளு..! (துபாய் போன..)


கானா

எத்தனை பேரு வந்திட்டாலும்
திருத்த முடியலே...
அந்த கஞ்சா போதை, அபின் இல்லாம
இருக்க முடியலே...
குப்பை பொறுக்க குனிஞ்சு, குனிஞ்சு
உடம்பு வளைஞ்சுதே...
எங்க மேலே ஊத்தும் வேர்வை
கூவ நாத்தம் நாறுதே...
உசுரு இருக்கும்போதும்
உடலு பொணக் கவுச்சி அடிக்குது...
காயம்பட்டா ஊத்தும் ரத்தம்
கறுப்பாத்தான் வருது...
பிளாட்பாரத்துல தூங்கும்போது
உசுரு மாண்டு போச்சுதுன்னா
கூடி அழ ஆளில்லாம
எங்க ஒடம்பு வாடிது...
கார்ப்பரேஷன் வண்டி ஒண்ணு
எங்கள சுமக்க வருது...
சவக்கிடங்குல இருக்கும் எலிக்கு
உடல் உணவாத்தான் போகுது...



மத்தியான வெயிலு இங்க மண்டையத்தான் பொளக்குது

(பல்லவி)

மத்தியான வெயிலு இங்க மண்டையத்தான் பொளக்குது..!
கத்திரி போட்ட வெயிலு இங்க கண்ணாமூச்சி காட்டுது..!
உடலில் உள்ள வியர்வை இங்க உழைக்காமலே வழியுது..!
கடலில் வீசும் காத்து இங்க கடும் வெப்பமாக மாறுது..!
(சரணம் - 1)

உடம்பு எல்லாம் கொப்பளமா ஆகுது..!
வியர்வையால உப்பளமா மாறுது..!
சுட்ட அப்பளமா நம்ம பூமி வேகுது..!
வெப்பத்தால நீர் வறண்டு போகுது..! (மத்தியான...)

(சரணம் - 2)

எரிமலையும் இவ்வெயிலும் ஒண்ணு..!
மரத்த நாம வளக்கணும்டா கண்ணு..!
மழையில்லன்னா நாம எல்லாம் மண்ணு..!
மனசிலதான் நீயும் இதை எண்ணு..! (மத்தியான...)

(சரணம் - 3)

பூமித்தாயை காக்க வேணும் நாமதான்..!
அவளை விட பொறுமைசாலி யாருதான்
பூமி மாசை தடுத்தாலே போதும்தான்..!
வெப்பமெல்லாம் தானா குறையும் ஜோருதான்..! (மத்தியான...)

-மோகனன்

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

புதன், 1 மே, 2013

வாழ்த்துக்கள்,



வாழ்கதொழிலாளர் தினம்..வாழ்கதொழிலாளர் தினம்