தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

வினாவிடை-5

பிரக்ருதிஸ்வரங்கள் என்றால் என்ன?


பிரக்ருதிஸ்வரங்கள்
பிரக்ருதிஸ்வரங்கள் என்பது கோமள,
தீவிர சுருதி பேதமற்ற ஸ்வரங்கள் ஆகும்
.இவற்றை தமிழில் இயற்கை ஸ்வரங்கள்
என்று அழைக்கப்படும் .
அவையாவன
1 .ஸட்ஜம்
2 .பஞ்சமம்

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


தமிழ்நாட்டிக் சங்கீதம்



சனி, 26 பிப்ரவரி, 2011

வினாவிடை-4

ஸ்வரம் என்றால் என்ன?

ஸ்வரம்
இயற்கையாகவே ரசனையைக் கொடுக்கும்
தொனியுடன்கூடிய அட்சரங்களை ஸ்வரங்கள்
என நாம் அழைக்கின்றோம்.இவைகள்
முறையே ஸ ரி க ம ப த நி ஆகும்


அதாவது
வடமொழியில்
-ஸட்ஜம்
ரி -ரிஷபம்
-காந்தாரம்
-மத்யமம்
-பஞ்சமம்
-தைவதம்
நி-நிஷாதம்
என்று கூறுவார்கள்


இந்த ஸ்வரங்களைதமிழிசையில்
-குரல்
ரி-துத்தம்
-கைக்கிளை
-உழை
-இளி
-விளரி
நி-தாரம்
என அழைக்கப்படுகின்றது .


ஸ்வரங்கள் ஏழு(7 ) வகைப்படும்
அவையாவன
-ஸட்ஜம்
ரி-ரிஷபம்
-காந்தாரம்
-மத்திமம்
-பஞ்சமம்
-தைவதம்
நி-நிஷாதம் 


இந்த ஏழு(7)ஸ்வரங்களும் இரு
வகையாக பிரிக்கப்பட்டுள்ளன
அவையாவன
1 .பிரக்ருதிஸ்வரங்கள்
2 .விக்ருதிஸ்வரங்கள்
ஆகும்

சனிக்கிழமை வாழ்த்துக்கள்



வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

வினாவிடை-3

சுருதி என்றால் என்ன?
               
சுருதி
சுருதிக்குரிய இன்னொரு பெயர் கேள்வி
ஆகும். சுருதியை ஆரம்பநாதம் எனவும்
அழைப்பார்கள் இசைஆரம்பிப்பதிற்கு
சுருதி மிக மிக இன்றி அமையாதது ஆகும்.
இதனாலேயே சுருதியை மாதா,லயத்தை
பிதா என சுலோகங்கள் கூறுகின்றன மாதா
என்பது தாயை குறிக்கும் ஒரு சொல்லாகும்
அத்துடன் பிதா என்பது தந்தையை குறிக்கும்
சொல்லாகும். சுலோகத்தில் சுருதி தாய்
ஆகவும் லயம் தந்தையாகவும் இருந்தால்
தான் இசை என்ற குழந்தையை பெறலாம்
ஆனால் இதில் ஏதாவது ஒன்று இல்லாமல்
போனால் உண்மையான இசை பிறக்காது
அத்துடன் சாமவேதத்தில் சுருதியை ஏகம்,
அநேகம் ,வியாபகம் என கூறப்பட்டுள்ளது.
ஆரம்பநாதமாகிய சுருதி இசைபாடுவதிற்குரிய
நாதக் கோடாக அமைந்துள்ளது எனலாம்
அத்துடன் இசை பயிற்சியை செய்ய விரும்பு
பவர்கள் இசைபயிற்சிக் உரிய அப்பியாசங்களை
ஆரம்பத்தில் இருந்து செய்து பழக வேண்டும்
என்பது விதிமுறையாகும் சுருதியுடன்
இணையாத இசை ஒரு போதும் சோபிதம்
அடையாது ஆகவே தான் சுருதிக்காக தம்புரா,
ஒத்து,சுருதிப்பெட்டி என பல கருவிகள்
உருவாகியுள்ளன பெரும்பாலும் சுருதிக்காக
தம்புராவையே உபயோகித்து வருகின்றனர்
அத்துடன் சுருதியானது இரண்டு வகைப்படும்.
அவையாவன
(1 ) பஞ்சமசுருதி
(2 ) மத்திம சுருதி

பஞ்சம சுருதியானது -
ஸா - பா - ஸா ஆகும்.

மத்திம சுருதியானது -
ஸா - மா - ஸா ஆகும்.

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


வியாழன், 24 பிப்ரவரி, 2011

வினாவிடை-2

நாதம் என்றால் என்ன?

நாதம்
நாதத்தின் மறுபெயர் இசையொலி ஆகும்
இந்த நாதமே சங்கீதத்திற்கு ஆதாரமாகும் 
நாதத்திலிருந்து சுருதிகளும்,சுருதிகளில்
இருந்து ஸ்வரங்களும் ஸ்வரங்களில்
இருந்து ராகங்களும் உருவாகின்றன
நாதம் இரண்டு வகைப்படும்
அவையாவன
(1 )ஆகநாதம்
(2 ) அனாகநாதம்


(1 )
ஆகநாதம்
மனிதனுடைய முயற்சியினால் உற்பத்தி
யாக்கப்படும் நாதம் ஆகநாதம் எனப்படும்
நாம் கேட்கும் சங்கீதம் ,வாத்தியங்களினால்
வாசிக்கப்படும் சங்கீதம் ,பாடும் சங்கீதம்
நாம் படிக்கும் சங்கீத சாஸ்த்திரங்கள் இவை
எல்லாம் ஆகநாதத்தை பற்றியதே ஆகும்.


(2 ) 
அனாகநாதம்
மனிதனுடைய முயற்சி இல்லாமல்
இயற்கையினாலே கேட்கப்படும்
நாதம் அனாகநாதம் ஆகும் அனாகநாதத்தின்
மர்மங்களை யோகிகள் நன்கு அறிவார்கள்
கடல் அலைகள் எழுப்பும் சங்கீதம் ஆனாகநாதம்
எனப்படும்

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


புதன், 23 பிப்ரவரி, 2011

வாத்தியக்கருவிகள்


அலங்காரம்-1


ஸ்வர வரிசைகள்


வினாவிடை-1

(1)சங்கீதம் என்றால் என்ன?


சங்கீதம்
"கழுத்திற்குச் சங்கு என்று ஒரு பெயர் 
உண்டு. கீதம் என்பது பாடலை குறிக்கும் "
"பொதுவாக சங்கிலும் கீதம் இருக்கிறது.
அதனை ஒலிப்பதால் வருவது சங்கநாதம்”
ஆகும் "கழுத்துப் பகுதியான தொண்டை
யிலிருந்து வரும்கீதம்தான் சங்கீதம் ஆகும் .
இச்சங்கீதமானது லலிதகலைகளுள் சிறந்தது,
செவிக்கும்மனதிற்கும் இன்பம்தரவல்லது
என இசையின்பெருமையை பலபெரியவர்
கள் புராணநூல்கள் வாயிலாக எடுத்து
கூறியுள்ளனர்.மனிதர்கள்மட்டுமன்றி
மிருகங்கள் அனைத்தையும்வசப்படுத்த
கூடிய தன்மை சங்கீததத்திற்கு உண்டு.
அத்துடன் தெய்வங்களின் தோற்றங்கள்
இசையின்பெருமையை எடுத்து காட்டு
கின்றன. அதற்கு உதாரணமாக சிவனின்
கையில்உடுக்கையும் சரஷ்வதியின்
கையில்வீணையும்கண்ணனின் கையில்
புல்லங்குழலும் இருப்பதை நாங்கள்
காணலாம்.அத்துடன் உடல் நோய்களை
மாற்றும் சக்தி இசைக்கு இருக்கின்றது
என பல ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து
கண்டுபிடித்து கூறியுள்ளனர் நாம் இசையை
கேட்பதினாலும், கற்று கொள்வதினாலும்
எமது உள்ளத்தில் சாந்தம்,அமைதி மனதை
ஒருமுகப்படுத்துதல் ஆகிய பல சிறந்த
பண்புகளை உருவாக்கி கொள்ளலாம்.

புதன்கிழமை வாழ்த்துக்கள்



புதன், 16 பிப்ரவரி, 2011

பட்டுமாமியே உன் பட்டுமகள் எங்கே

யாழ்ப்பாணம் போக ரெடியா


குருகுலகர்நாட்டிக் சங்கீதம் 6

குருகுலகர்நாட்டிக் சங்கீதம் 5

குருகுலகர்நாட்டிக் சங்கீதம் 4

குருகுலகர்நாட்டிக் சங்கீதம் 3

கர்நாட்டிக் சங்கீதம் 2






புதன்கிழமை வாழ்த்துக்கள்


செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

குருகுலகர்நாட்டிக் சங்கீதம் 2

குருகுலகர்நாட்டிக் சங்கீதம் 1

சின்ன சின்ன ராகம்



சின்ன சின்ன ராகம்

சின்ன சின்ன ராகம்




சின்ன சின்ன ராகம்



சின்ன சின்ன ராகம்



சின்ன சின்ன ராகம்



சின்ன சின்ன ராகம்



சின்ன சின்ன ராகம்



சின்ன சின்ன ராகம்



சின்ன சின்ன ராகம்




செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்


சின்ன சின்ன ராகம்