தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

செவ்வாய், 12 ஜூலை, 2011

செவ்வாய்க்கிழமை


மேளகர்த்தா இராகங்கள்

மேளகர்த்தா இராகங்கள் கருநாடக இசையின் இராகங்களில், ச - ரி - க - ம - ப - த - நி என்ற ஏழு சுரங்களையும் கொண்டவையாகும். வேறுபாடுள்ள சுரங்கள் மாறுவதாலேயே வித்தியாசங்கள் ஏற்படுகின்றன.
இதைத் தாய் இராகம், கர்த்தா இராகம், சம்பூர்ண இராகம், மேள இராகம், ஜனக இராகம், என்ற பெயர்களால் அழைப்பர். பன்னிரண்டு சுருதிகளைக் கொண்டு, உருவாகும் தாய் இராகங்கள் மொத்தம் 32 தான், இவையே மேள இராகங்கள் என்று கூறப்பட்டன, இதுவே சரியானது என்றும் கருதப் பெறுகின்றது ஆனால் வேங்கடமகி என்பவர், தமது சதுர்த்தண்டிப் பிரகாசிகை என்னும் நூலில், 12 சுருதித் தானங்களையே 16 ஆக ஒருவாறு இரட்டுறக் கொண்டு (ரி,க, த,நி ஆகியவற்றை முறைமீறி ஒவ்வொன்றும் 3 பகுதிகளாகக் கொண்டு), 72 மேளகர்த்தா இராகங்களை ஆக்கினார். இன்றைய மரபில் 72 மேளகர்த்தா இராகம் என்பதே பெருவழக்கு ஆகும். இவற்றிலிருந்து பிற பிறந்த இராகங்கள் (ஜன்னிய இராகங்கள்) தோன்றுகின்றன. 72 மேளகர்த்தாக்களும் 16 பெயர்களுடன் 12 சுரத்தான அடிப்படையில் அமைந்துள்ளன.


திங்கள், 11 ஜூலை, 2011

ஏறுமயில்

ஏறுமயில் ஏறிவிளையாடு முகம் ஒன்றே
     ஈசனுடன் ஞானமொழி பேசு முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கு முகம் ஒன்றே
     குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
     வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும்
     ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே.

கர்நாட்டிக்-வர்ணம், - எவரிபோதன