தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

செவ்வாய், 12 ஜூலை, 2011

செவ்வாய்க்கிழமை


மேளகர்த்தா இராகங்கள்

மேளகர்த்தா இராகங்கள் கருநாடக இசையின் இராகங்களில், ச - ரி - க - ம - ப - த - நி என்ற ஏழு சுரங்களையும் கொண்டவையாகும். வேறுபாடுள்ள சுரங்கள் மாறுவதாலேயே வித்தியாசங்கள் ஏற்படுகின்றன.
இதைத் தாய் இராகம், கர்த்தா இராகம், சம்பூர்ண இராகம், மேள இராகம், ஜனக இராகம், என்ற பெயர்களால் அழைப்பர். பன்னிரண்டு சுருதிகளைக் கொண்டு, உருவாகும் தாய் இராகங்கள் மொத்தம் 32 தான், இவையே மேள இராகங்கள் என்று கூறப்பட்டன, இதுவே சரியானது என்றும் கருதப் பெறுகின்றது ஆனால் வேங்கடமகி என்பவர், தமது சதுர்த்தண்டிப் பிரகாசிகை என்னும் நூலில், 12 சுருதித் தானங்களையே 16 ஆக ஒருவாறு இரட்டுறக் கொண்டு (ரி,க, த,நி ஆகியவற்றை முறைமீறி ஒவ்வொன்றும் 3 பகுதிகளாகக் கொண்டு), 72 மேளகர்த்தா இராகங்களை ஆக்கினார். இன்றைய மரபில் 72 மேளகர்த்தா இராகம் என்பதே பெருவழக்கு ஆகும். இவற்றிலிருந்து பிற பிறந்த இராகங்கள் (ஜன்னிய இராகங்கள்) தோன்றுகின்றன. 72 மேளகர்த்தாக்களும் 16 பெயர்களுடன் 12 சுரத்தான அடிப்படையில் அமைந்துள்ளன.


திங்கள், 11 ஜூலை, 2011

ஏறுமயில்

ஏறுமயில் ஏறிவிளையாடு முகம் ஒன்றே
     ஈசனுடன் ஞானமொழி பேசு முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கு முகம் ஒன்றே
     குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
     வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகம் ஆனபொருள் நீ அருள வேண்டும்
     ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே.

கர்நாட்டிக்-வர்ணம், - எவரிபோதன


வியாழன், 2 ஜூன், 2011

ஸப்த ஸ்வரங்களும் பிரிவுகளும்

ஸ்வரங்களின் பெயர்கள்
ஷட்ஜம்
ரிஷபம்
காந்தாரம்
மத்யமம்
பஞ்சமம்
தைவதம்
நிஷாதம்

தாளங்கள்

தாளம்
லகு, த்ருதம், என மூன்றுவித அங்கங்களை
கொண்டது தாளம் ஆகும்

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

பாடத்திட்டம் 2011/2012


Grade 1


Theory Q& A
1.What is Janta varisai?
A Swara exercise in double notes e.g. SS RR GG MM


2.What is a Sthayi?
An Octave: a series of swaras beginning from S and ending in N.


3.What is Akshara Kaalam?
A time- unit in our Carnatic Music


4.What is a Swaram?
Swaram is a musical note


5.Name the seven swaras (Saptha Swaras)
Shadjam
Rishapham
Gandharam
Madhyamam
Panchamam
Thaivatham
Nishatham


6.Name the seven Thallams (Saptha Thallams)
1. Thuruva Thallam     
2.Mattiya Thallam
3.Rupaka Thallam 
4.Yampa Thallam  
5.ThiriPudai Thaallam
6.Ada Thallam
7.  EEka Thallam      

வினாவிடை-8

பன்னிரண்டு ஸ்வர ஸ்தானங்கள்
1 .ஸட்யம்-
2 .சுத்தரிஷபம்-ரி 1
3 .சதுஸ்ருதிரிஷபம் -ரி 2
4 .சாதாரண காந்தாரம் -க 1
5 .அந்தர காந்தாரம் -க 2
6 .சுத்த மத்யமம் -ம 1
7 .பிரதி மத்யமம் -ம 2
8 .பஞ்சமம் -
9 .சுத்ததைவதம் -த 1
10 .சதுஸ்ருதி தைவதம் -த 2
11 .கைசிகி நிஷாதம் -நி 1
12 .காகவி நிஷாதம் -நி 2

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


scraps orkut

சனி, 16 ஏப்ரல், 2011

வினாவிடை-7

(1)ஸ்வரதானங்கள் எத்தனை
வகைப்படும்?
ஸ்வரஸ்தானங்கள் பன்னிரண்டு வகைப்படும்

(2) அவை எவை?
ஸ்வரதானங்கள் ஏழு(7)வகைப்படும்
ஸ- ஸட்சம்
ரி-ரிஷபம்
க-காந்தாரம்
ம-மத்யமம்
ப-பஞ்சமம்
த-தைவதம்
நி-நிஷாதம்

இந்த 7 ஸ்வரங்களும் இரு வகையாக
பிரிக்கப்பட்டுள்ளன
அவையாவன
(1)பிரக்ருதிஸ்வரம்
(2)விக்ருதிஸ்வரம்


பிரக்ருதிஸ்வரம் என்றால்
கோமள,தீவிர சுருதி பேதமற்ற ஸ்வரங்களான
ஸட்ஜம்,பஞ்சமம் ஆகும் .


விக்ருதிஸ்வரங்கள் என்றால்
கோமளதீவிர சுருதி பேதமுள்ள ஸ்வரங்களான
ரிஷபம் ,காந்தாரம்,மத்யமம்,தைவதம்,நிஷாதம்
ஆகிய ஸ்வரங்கள் முறையேஒவ்வொன்றும் 
கோமள ஸ்வரஸ்தானமாகவும்,தீவிர ஸ்வர
ஸ்தானமாகவும் மாறுகின்றன .


ரி,க,ம,த,நி ஆகிய ஜந்து (5)ஸ்வரங்களும்
முறையே ஒவ்வொன்றும் இரண்டு
ஸ்வரங்களாக மாறும் போது 5 தர 2
சமன் 10 ஸ்வரதானங்களாக ஆகின்றன

இவற்றுடன் பிரக்ருதி ஸ்வரங்கலாகிய
ஸட்யம்,பஞ்சமம் ஆகிய இரண்டு
ஸ்வரங்களையும் சேர்க்க மொத்தம் 12
ஸ்வரஸ்தானங்களாக மாறுகின்றன

சனிக்கிழமை வாழ்த்துக்கள்

Orkut Scraps - Rose

வியாழன், 14 ஏப்ரல், 2011

பரீட்சை-1

(1)சங்கீதம் என்றால் என்ன என்பதை விளக்குக?


(2)நாதம் என்றால் என்ன என்பதை விளக்குக?


(3)நாதத்தின் பிரிவுகள் எவை என்பதை விளக்குக?


(4)நாதத்தின் பிரிவுகளை விளக்குக?


(5)சுருதி என்றால் என்ன என்பதை விளக்குக?


(6)சுருதியின் வேறு பெயர் என்ன?


(7)இசையை பழக விரும்புவருக்குரிய 
     விதிமுறை என்ன?


(8)சுருதிக்காக பயன்படுத்தப்படும் கருவிகள் 
     எவை?


(9)சுருதி எத்தனை வகைப்படும்? அவை எவை?


(10)ஸ்வரம் என்றால் என்ன என்பதை விளக்குக?


(11)ஸ்வரங்களின் வகைகள் எத்தனை? 
      அவற்றை விளக்குக?


(12)ஸ்வரங்களை வடமொழியில் எப்படி 
     அழைப்பார்கள்?


(13)ஸ்வரங்களை தமிழ்மொழியில் எப்படி 
     அழைப்பார்கள்?


(14)இயற்கை ஸ்வரங்கள் எவை?


(15)செயற்கை ஸ்வரங்கள் எவை?

வினாவிடை-6

விக்ருதிஸ்வரங்கள் என்றால் என்ன?


விக்ருதிஸ்வரங்கள்
விக்ருதிஸ்வரங்கள் என்பது கோமள தீவிர சுருதி
பேதமுள்ள ஸ்வரங்களாகும்.இவை அசைவுள்ள
ஸ்வரங்களாகும் . இவற்றைத் தமிழில் செயற்கை
ஸ்வரங்கள் என அழைப்பார்கள் .
அவையாவன .
1.ரிஷபம்
2.மத்யமம்
3.நிஷாதம்
4.காந்தாரம்
5.தைவதம்

தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துக்கள்


வியாழக்கிழமை வாழ்த்துக்கள்

scraps


ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

வினாவிடை-5

பிரக்ருதிஸ்வரங்கள் என்றால் என்ன?


பிரக்ருதிஸ்வரங்கள்
பிரக்ருதிஸ்வரங்கள் என்பது கோமள,
தீவிர சுருதி பேதமற்ற ஸ்வரங்கள் ஆகும்
.இவற்றை தமிழில் இயற்கை ஸ்வரங்கள்
என்று அழைக்கப்படும் .
அவையாவன
1 .ஸட்ஜம்
2 .பஞ்சமம்

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


தமிழ்நாட்டிக் சங்கீதம்



சனி, 26 பிப்ரவரி, 2011

வினாவிடை-4

ஸ்வரம் என்றால் என்ன?

ஸ்வரம்
இயற்கையாகவே ரசனையைக் கொடுக்கும்
தொனியுடன்கூடிய அட்சரங்களை ஸ்வரங்கள்
என நாம் அழைக்கின்றோம்.இவைகள்
முறையே ஸ ரி க ம ப த நி ஆகும்


அதாவது
வடமொழியில்
-ஸட்ஜம்
ரி -ரிஷபம்
-காந்தாரம்
-மத்யமம்
-பஞ்சமம்
-தைவதம்
நி-நிஷாதம்
என்று கூறுவார்கள்


இந்த ஸ்வரங்களைதமிழிசையில்
-குரல்
ரி-துத்தம்
-கைக்கிளை
-உழை
-இளி
-விளரி
நி-தாரம்
என அழைக்கப்படுகின்றது .


ஸ்வரங்கள் ஏழு(7 ) வகைப்படும்
அவையாவன
-ஸட்ஜம்
ரி-ரிஷபம்
-காந்தாரம்
-மத்திமம்
-பஞ்சமம்
-தைவதம்
நி-நிஷாதம் 


இந்த ஏழு(7)ஸ்வரங்களும் இரு
வகையாக பிரிக்கப்பட்டுள்ளன
அவையாவன
1 .பிரக்ருதிஸ்வரங்கள்
2 .விக்ருதிஸ்வரங்கள்
ஆகும்

சனிக்கிழமை வாழ்த்துக்கள்



வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

வினாவிடை-3

சுருதி என்றால் என்ன?
               
சுருதி
சுருதிக்குரிய இன்னொரு பெயர் கேள்வி
ஆகும். சுருதியை ஆரம்பநாதம் எனவும்
அழைப்பார்கள் இசைஆரம்பிப்பதிற்கு
சுருதி மிக மிக இன்றி அமையாதது ஆகும்.
இதனாலேயே சுருதியை மாதா,லயத்தை
பிதா என சுலோகங்கள் கூறுகின்றன மாதா
என்பது தாயை குறிக்கும் ஒரு சொல்லாகும்
அத்துடன் பிதா என்பது தந்தையை குறிக்கும்
சொல்லாகும். சுலோகத்தில் சுருதி தாய்
ஆகவும் லயம் தந்தையாகவும் இருந்தால்
தான் இசை என்ற குழந்தையை பெறலாம்
ஆனால் இதில் ஏதாவது ஒன்று இல்லாமல்
போனால் உண்மையான இசை பிறக்காது
அத்துடன் சாமவேதத்தில் சுருதியை ஏகம்,
அநேகம் ,வியாபகம் என கூறப்பட்டுள்ளது.
ஆரம்பநாதமாகிய சுருதி இசைபாடுவதிற்குரிய
நாதக் கோடாக அமைந்துள்ளது எனலாம்
அத்துடன் இசை பயிற்சியை செய்ய விரும்பு
பவர்கள் இசைபயிற்சிக் உரிய அப்பியாசங்களை
ஆரம்பத்தில் இருந்து செய்து பழக வேண்டும்
என்பது விதிமுறையாகும் சுருதியுடன்
இணையாத இசை ஒரு போதும் சோபிதம்
அடையாது ஆகவே தான் சுருதிக்காக தம்புரா,
ஒத்து,சுருதிப்பெட்டி என பல கருவிகள்
உருவாகியுள்ளன பெரும்பாலும் சுருதிக்காக
தம்புராவையே உபயோகித்து வருகின்றனர்
அத்துடன் சுருதியானது இரண்டு வகைப்படும்.
அவையாவன
(1 ) பஞ்சமசுருதி
(2 ) மத்திம சுருதி

பஞ்சம சுருதியானது -
ஸா - பா - ஸா ஆகும்.

மத்திம சுருதியானது -
ஸா - மா - ஸா ஆகும்.

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


வியாழன், 24 பிப்ரவரி, 2011

வினாவிடை-2

நாதம் என்றால் என்ன?

நாதம்
நாதத்தின் மறுபெயர் இசையொலி ஆகும்
இந்த நாதமே சங்கீதத்திற்கு ஆதாரமாகும் 
நாதத்திலிருந்து சுருதிகளும்,சுருதிகளில்
இருந்து ஸ்வரங்களும் ஸ்வரங்களில்
இருந்து ராகங்களும் உருவாகின்றன
நாதம் இரண்டு வகைப்படும்
அவையாவன
(1 )ஆகநாதம்
(2 ) அனாகநாதம்


(1 )
ஆகநாதம்
மனிதனுடைய முயற்சியினால் உற்பத்தி
யாக்கப்படும் நாதம் ஆகநாதம் எனப்படும்
நாம் கேட்கும் சங்கீதம் ,வாத்தியங்களினால்
வாசிக்கப்படும் சங்கீதம் ,பாடும் சங்கீதம்
நாம் படிக்கும் சங்கீத சாஸ்த்திரங்கள் இவை
எல்லாம் ஆகநாதத்தை பற்றியதே ஆகும்.


(2 ) 
அனாகநாதம்
மனிதனுடைய முயற்சி இல்லாமல்
இயற்கையினாலே கேட்கப்படும்
நாதம் அனாகநாதம் ஆகும் அனாகநாதத்தின்
மர்மங்களை யோகிகள் நன்கு அறிவார்கள்
கடல் அலைகள் எழுப்பும் சங்கீதம் ஆனாகநாதம்
எனப்படும்

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்