மேளகர்த்தா இராகங்கள் கருநாடக இசையின் இராகங்களில், ச - ரி - க - ம - ப - த - நி என்ற ஏழு சுரங்களையும் கொண்டவையாகும். வேறுபாடுள்ள சுரங்கள் மாறுவதாலேயே வித்தியாசங்கள் ஏற்படுகின்றன.
இதைத் தாய் இராகம், கர்த்தா இராகம், சம்பூர்ண இராகம், மேள இராகம், ஜனக இராகம், என்ற பெயர்களால் அழைப்பர். பன்னிரண்டு சுருதிகளைக் கொண்டு, உருவாகும் தாய் இராகங்கள் மொத்தம் 32 தான், இவையே மேள இராகங்கள் என்று கூறப்பட்டன, இதுவே சரியானது என்றும் கருதப் பெறுகின்றது ஆனால் வேங்கடமகி என்பவர், தமது சதுர்த்தண்டிப் பிரகாசிகை என்னும் நூலில், 12 சுருதித் தானங்களையே 16 ஆக ஒருவாறு இரட்டுறக் கொண்டு (ரி,க, த,நி ஆகியவற்றை முறைமீறி ஒவ்வொன்றும் 3 பகுதிகளாகக் கொண்டு), 72 மேளகர்த்தா இராகங்களை ஆக்கினார். இன்றைய மரபில் 72 மேளகர்த்தா இராகம் என்பதே பெருவழக்கு ஆகும். இவற்றிலிருந்து பிற பிறந்த இராகங்கள் (ஜன்னிய இராகங்கள்) தோன்றுகின்றன. 72 மேளகர்த்தாக்களும் 16 பெயர்களுடன் 12 சுரத்தான அடிப்படையில் அமைந்துள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.