தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

வினாவிடை-3

சுருதி என்றால் என்ன?
               
சுருதி
சுருதிக்குரிய இன்னொரு பெயர் கேள்வி
ஆகும். சுருதியை ஆரம்பநாதம் எனவும்
அழைப்பார்கள் இசைஆரம்பிப்பதிற்கு
சுருதி மிக மிக இன்றி அமையாதது ஆகும்.
இதனாலேயே சுருதியை மாதா,லயத்தை
பிதா என சுலோகங்கள் கூறுகின்றன மாதா
என்பது தாயை குறிக்கும் ஒரு சொல்லாகும்
அத்துடன் பிதா என்பது தந்தையை குறிக்கும்
சொல்லாகும். சுலோகத்தில் சுருதி தாய்
ஆகவும் லயம் தந்தையாகவும் இருந்தால்
தான் இசை என்ற குழந்தையை பெறலாம்
ஆனால் இதில் ஏதாவது ஒன்று இல்லாமல்
போனால் உண்மையான இசை பிறக்காது
அத்துடன் சாமவேதத்தில் சுருதியை ஏகம்,
அநேகம் ,வியாபகம் என கூறப்பட்டுள்ளது.
ஆரம்பநாதமாகிய சுருதி இசைபாடுவதிற்குரிய
நாதக் கோடாக அமைந்துள்ளது எனலாம்
அத்துடன் இசை பயிற்சியை செய்ய விரும்பு
பவர்கள் இசைபயிற்சிக் உரிய அப்பியாசங்களை
ஆரம்பத்தில் இருந்து செய்து பழக வேண்டும்
என்பது விதிமுறையாகும் சுருதியுடன்
இணையாத இசை ஒரு போதும் சோபிதம்
அடையாது ஆகவே தான் சுருதிக்காக தம்புரா,
ஒத்து,சுருதிப்பெட்டி என பல கருவிகள்
உருவாகியுள்ளன பெரும்பாலும் சுருதிக்காக
தம்புராவையே உபயோகித்து வருகின்றனர்
அத்துடன் சுருதியானது இரண்டு வகைப்படும்.
அவையாவன
(1 ) பஞ்சமசுருதி
(2 ) மத்திம சுருதி

பஞ்சம சுருதியானது -
ஸா - பா - ஸா ஆகும்.

மத்திம சுருதியானது -
ஸா - மா - ஸா ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.